உக்ரைனுக்கு போர் டாங்கிகளை வழங்கும் ஜெர்மனி.....

உக்ரைனுக்கு போர் டாங்கிகளை வழங்கும் ஜெர்மனி.....

உக்ரைனுக்கு போர் டாங்கிகளை கொடுப்பதற்கான நடவடிக்கைகளில் அமெரிக்கா மற்றும் ஜெர்மனி ஈடுபட்டுள்ளது. 

உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே  கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி முதல் போர் நடந்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.  ரஷ்யா போர் நிறுத்ததை இதுவரை அறிவிக்காத நிலையில் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  ரஷ்யா தொடர்ந்து அதனுடைய பலத்தை நிரூபித்து வரும் நிலையில் உலக நாடுகள் பலவும் உக்ரைனுக்கு ஆதரவு கரம் நீட்டி வருகின்றன.

இந்த வகையில் போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஜெர்மனி நாடுகள் போர் டாங்கிகளை வழங்குவதில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் திடீர் குண்டுவெடிப்பு.... காரணம் யார்?!!!