பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் திடீர் குண்டுவெடிப்பு.... காரணம் யார்?!!!

பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் திடீர் குண்டுவெடிப்பு.... காரணம் யார்?!!!

மத்திய நைஜீரியாவில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 27 ஃபுலானி இன மேய்ப்பர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

நசராவா மாநிலத்தின் டோமா பகுதியில் பழங்குடி ஃபுலானி இனமக்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர்.  இந்நிலையில் அவர்கள் கால்நடைகளை மேய்த்து வந்த பகுதியில் தீடீர் குண்டுவெடிப்பு நடந்துள்ளது.  இந்த குண்டுவெடிப்பில் 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.  

தொடர்ந்து பழங்குடியினர் அமைதியுடன் இருக்குமாறும், சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசுத் தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:    வெற்றி பெற்ற மக்கள் போராட்டம்... விரைவில் பொதுத்தேர்தல்!!!