பெருவில் போராட்டம் உச்சம் தொட்டு வரும் நிலையில், விரைவில் பொதுத் தேர்தலுக்கு ஒப்புதல் அளிக்குமாறு காங்கிரஸுக்கு அதிபர் டினா போலுவார்டே அழைப்பு விடுத்துள்ளார்.
பெருவின் முன்னாள் அதிபர் பெட்ரோ காஸ்டில்லோ ஊழல் குற்றச்சாட்டில் பதவி பறிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள டீனா பொலுவார்த்தேவுக்கு எதிராக நடந்து வரும் போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
இதன் காரணமாக 60க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். பல்வேறு இடங்களில் போராட்டகாரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்திருக்கிறது.
இந்நிலையில் விரைவில் பொதுத் தேர்தலுக்கு ஒப்புதல் அளிக்குமாறு காங்கிரஸுக்கு அதிபர் டினா போலுவார்டே அழைப்பு விடுத்துள்ளார். இதனால் விரைவில் பெருவில் பொதுத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-நப்பசலையார்
இதையும் படிக்க: கடும் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை!!!