அசாம் மாநிலத்தின் தொடர்ச்சியான தீ விபத்துகள்!!!

அசாம் மாநிலத்தின் தொடர்ச்சியான தீ விபத்துகள்!!!
Published on
Updated on
1 min read

அசாம் மாநிலம் கச்சார் மாவட்டத்தில் செங்கல் சூளையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.  இந்த வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 7 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

இந்நிலையில், கவுகாத்தியில் ஒரு பெண்ணும் அவரது ஏழு வயது மகளும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.  இதைத் தொடர்ந்து ஒரு வீடியோவும் வெளியாகியுள்ளது.  அந்த வீடியோவில், தானும் தன் மகளும் தனது கணவரால் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக அந்த பெண் குற்றஞ்சாட்டியுள்ளார்.

காவல்துறை துணை ஆணையர் சுதாகர் சிங் கூறுகையில், அசாம் மாநிலத்தின் ஹடிகான் பகுதியில் உள்ள வாடகை வீட்டின் அறையில் பெண் மற்றும் அவரது மகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன எனவும் முதல் பார்வையில் இது தற்கொலையாகத் தெரிகிறது எனவும் கூறியுள்ளார்.  ஆனால் நாங்கள் எல்லா அம்சங்களையும் ஆராய்ந்து வருகிறோம் எனவும் பெண்ணின் கணவர், அவரது தாய் மற்றும் சகோதரி விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com