பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட தகராறில் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட மாணவர்கள் !!!!

பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட தகராறில் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட மாணவர்கள் !!!!

இரவு 8.50 மணியளவில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக நூலகத்தில் தகராறு நடப்பதாக தகவல் கிடைத்தது எனவும் விசாரணையில், இரண்டு மாணவர் குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது தெரியவந்தது என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை தென்கிழக்கு டெல்லியின் ஜாமியா நகர் பகுதியில் உள்ள ஹோலி ஃபேமிலி மருத்துவமனைக்குள் ஜாமியா மில்லியா இஸ்லாமியா மாணவர் ஒருவர் மற்றொரு மாணவரால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று போலீசார் தெரிவித்துள்ளார்.

இரவு 8.50 மணியளவில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக நூலகத்தில் தகராறு நடப்பதாக தகவல் கிடைத்தது.

விசாரணையில், இரண்டு மாணவர் குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது தெரியவந்தது என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தில், உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் வசிக்கும் நோமன் சவுத்ரி (26) என்ற மாணவர் தலையில் காயம் ஏற்பட்டு ஹோலி பேமிலி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றதாக அதிகாரி கூறியுள்ளார்.

நௌமன் சௌத்ரியின் கூட்டாளியான நௌமன் அலி என்ற மற்றொரு மாணவரும்  நண்பரைப் பார்க்க மருத்துவமனைக்குச் சென்றதாக அவர்கள் கூறியுள்ளனர்.

இதற்கிடையில், இரண்டாவது குழுவைச் சேர்ந்த ஒரு மாணவர், ஹரியானாவில் உள்ள மேவாட்டில் வசிக்கும் ஜலால்,  நண்பர்களுடன் மருத்துவமனைக்கு வந்து, அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வெளியே நவுமன் அலியையும் நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக அதிகாரி தெரிவித்துள்ளனர்.

நௌமன் அலிக்கு உச்சந்தலையில் மேலோட்டமான காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் எய்ம்ஸ் ஐசியுவிற்கு மாற்றப்பட்டுள்ளனர். குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி ஜாமியா நகர் மற்றும் நியூ பிரண்ட்ஸ் காலனி காவல் நிலையங்களில் சட்ட நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது என்று அதிகாரி மேலும் கூறியுள்ளார்.

இதையும் படிக்க:  63 ஆபாச இணைய தளங்களை முடக்க மத்திய அரசு உத்தவு..!