“எங்களுக்கு இங்கு பாதுகாப்பு இல்லை!”- போராட்டத்தில் இறங்கிய மாணவர்கள்...

நாயை விரட்டிப் பிடித்து கொன்று தின்ற சிறுத்தையால் பதறிய மாணவர்கள், தங்களுக்கு பாதுகாப்பு தரக்கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

“எங்களுக்கு இங்கு பாதுகாப்பு இல்லை!”- போராட்டத்தில் இறங்கிய மாணவர்கள்...

ஆந்திரா | திருப்பதியில் உள்ள வெங்கடேஸ்வரா கால்நடை பல்கலைக்கழக வளாகத்திற்கு நேற்று இரவு வந்த சிறுத்தைகள் அங்கு இருந்த நாயை பிடித்து கொன்றது. அதனை மரத்தில் மேல் எடுத்துச் சென்று, அதனைத் தின்று மீதியை விட்டு சென்றது.

இந்நிலையில், அந்த நாயின் உறுப்புகள் சில, அங்கிருந்த மின்சார கம்பிகளில் தொங்கியும், அந்த நாயின் இறந்த உடல் கீழே விழுந்து கிடந்தது. இதனை பார்த்த அக்கல்லூரி மாணவ, மாணவியர்கள்  கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

சிறுத்தை நடமாட்டம் காரணமாக எங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று கூறும் மாணவிகள் இன்று ஹாஸ்டல் அறைகளை காலி செய்து உடைமையுடன் வெளியேறி பல்கலைக்கழக வளாகத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

அப்போது அதிகாரிகள் கூண்டு வைத்து சிறுத்தைகளை பிடிக்க வேண்டும், அல்லது எங்களை இங்கிருந்து வெளியில் அனுப்பி வைக்க வேண்டும் என்று அவர்கள் கூறினர்.

மேலும் படிக்க | திருப்பதியில் சிறுத்தை அட்ரோசிட்டி... அச்சத்தில் மாணவர்கள்...