திருப்பதியில் சிறுத்தை அட்ரோசிட்டி... அச்சத்தில் மாணவர்கள்...

இரவு நேரத்தில் நாயை அடித்து மரத்தின் மீது தூக்கி சென்ற சிறுத்தை அதனை சாப்பிட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதியில் சிறுத்தை அட்ரோசிட்டி... அச்சத்தில் மாணவர்கள்...
Published on
Updated on
1 min read

ஆந்திரா | திருப்பதியில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா வெட்னரி யுனிவர்சிட்டி என்ற பெயரில் கால்நடை பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. மலை அடிவாரத்தில் இருக்கும் பல்கலைக்கழக வளாகத்திற்கு அவ்வப்போது சிறுத்தை, காட்டு பன்றி, கரடி, மான் ஆகிய வனவிலங்குகள் வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் நேற்று இரவு அங்கு வந்த சிறுத்தை, அங்கிருந்த நாய் ஒன்றை தாக்கி அருகில் உள்ள தென்னை மரம் மீது கொண்டு சென்று தின்றுள்ளது. அப்போது மரத்தின் மீது இருந்து விழுந்த மாமிச எச்சம் அங்குள்ள மின்சார வயர்கள் மீது விழுந்து தொங்கி கொண்டுள்ளது.

மேலும், மீதமிருந்த நாயின் உடல் கீழே விழுந்து கிடந்ததை பார்த்த அங்கு படிக்கும் மாணவ மாணவிகள் கடும் அச்சமடைந்துள்ளனர். அதிக ஆள் நடமாட்டம் இருக்கும் போதே சிறுத்தை செய்த இது போன்ற காரியம் அங்குள்ள மக்களை பதற வைத்துள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com