குஜராத் தவிர, மற்ற மாநிலங்களில் ரூ.2 உயர்வு... அதிகரித்த அமுல் பாலின் விலை...

பிரதமர் நரேந்திர மோடியின் மாநிலமான குஜராத்தைத் தவிர, மற்ற அனைத்து மாநிலங்களிலும் அமுல் பாலின் விலை ரூ.2 அதிகரித்துள்ளது. இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
குஜராத் தவிர, மற்ற மாநிலங்களில் ரூ.2 உயர்வு... அதிகரித்த அமுல் பாலின் விலை...
Published on
Updated on
1 min read

குஜராத் தவிர அனைத்து மாநிலங்களிலும் அமுல் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்ந்துள்ளது.

புதுடெல்லி, நாடு முழுவதும் 'அமுல்' என்ற பெயரில் பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்யும் குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு, குஜராத் தவிர அனைத்து மாநிலங்களிலும் முழு கொழுப்பு நிறைந்த பால் மற்றும் எருமைப் பால் ஆகியவற்றின் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியுள்ளது.

இந்த விலை உயர்வை அடுத்து முழு கொழுப்பு நிறைந்த பால் லிட்டருக்கு ரூ.61 லிருந்து ரூ.63 ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து குஜராத் கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பின் நிர்வாக இயக்குனர் சோதி கூறும்போது, கால்நடை தீவன செலவு கடந்த ஆண்டை விட தோராயமாக 20 சதவீதம் அதிகரித்துள்ளது.

செயல்பாட்டு செலவு மற்றும் பால் உற்பத்திக்கான செலவு அதிகரித்திருப்பதை கருத்தில் கொண்டு இந்த விலை உயர்வு நடைமுறைக்கு வருவதாக அவர் தெரிவித்தார். முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 'அமுல்' மற்றும் 'மதர் டெய்ரி' ஆகிய இரண்டு நிறுவனங்களும் பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com