தூத்துக்குடி - மைசூரு இடையே சிறப்புக் கட்டண ரயில்...! 3 நாட்களுக்கு இயக்கம்...!

தூத்துக்குடி - மைசூரு இடையே சிறப்புக் கட்டண ரயில்...! 3 நாட்களுக்கு இயக்கம்...!

தூத்துக்குடி - மைசூரு இடையே சிறப்புக் கட்டண ரயில் 3 நாட்களுக்கு இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தெற்கு ரயில்வே அறிவிப்பின்படி, மைசூர் - தூத்துக்குடி சிறப்புக் கட்டண ரயில், வரும் நவம்பர் 4,11,18 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த நாட்களில், மைசூரிலிருந்து பகல் 12.05 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5 மணிக்கு தூத்துக்குடி வந்தடையும்.

மறுமார்க்கத்தில் தூத்துக்குடி - மைசூர் சிறப்புக் கட்டண ரயில், நவம்பர் 5,12,19 ஆகிய சனிக்கிழமைகளில் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில், தூத்துக்குடியிலிருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8. 30 மணிக்கு மைசூரு சென்றடையும். 

இந்த ரயில்கள் யெலியூர், மாண்டியா, பெங்களூர், ஓசூர், தர்மபுரி, சேலம், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி உள்ளிட்ட ஊர்கள் வழியே செல்லும் எனவும கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்ட 53வது தேசிய புலிகள் காப்பகம்..!!!