நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்ட 53வது தேசிய புலிகள் காப்பகம்..!!!

நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்ட 53வது தேசிய புலிகள் காப்பகம்..!!!

வங்காளப் புலி இந்தியாவின் தேசிய விலங்காக 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ப்ராஜக்ட் டைகர் முன்முயற்சியின் கீழ் அறிவிக்கப்பட்டது .  அதற்கு முன்பு சிங்கம் இந்தியாவின் தேசிய விலங்காக இருந்தது.  

இந்திய புலிகள் காப்பகம்:

இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் ரெட் டேட்டா புத்தகத்தின்படி புலிகள் அழிந்து வரும் இனமாக கருதப்படுவதால், புலிகளைப் பாதுகாப்பதற்காக , இந்திய புலிகள் காப்பகம் 1973 இல் நிறுவப்பட்டது.

53வது புலிகள் காப்பகம்:

இந்தியாவில் இதுவரை 52 புலிகள் காப்பகங்கள் இருந்த நிலையில் தற்போது நாட்டின் 53வது புலிகள் காப்பகத்தை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் நாட்டிற்கு அர்ப்பணித்துள்ளார்.  தேசிய புலிகள் காப்பகங்கள் , தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தால் நிர்வகிக்கப்படுகின்றன. 

பூபேந்திர யாதவ்:

அனைவருக்கும் வாழ்த்துகள்!

”உத்தரபிரதேசத்தில் உள்ள ராணிப்பூர் புலிகள் காப்பகம் இந்தியாவின் 53வது புலிகள் காப்பகமாக மாறியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.” என ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், “529.36 சதுர கி.மீ பரப்பளவில் பரவியுள்ள புதிய புலி காப்பகம் நமது புலி பாதுகாப்பு முயற்சிகளுக்கு மேலும் வலு சேர்க்கும்.” எனவும் கூறியுள்ளார்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   மோர்பி தொங்கும் பாலத்தில் உயிரிழந்த பாஜக எம்.பி குடும்பம்..!! கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்!!