கர்நாடகா வந்தடைந்த சோனியா காந்தி!!!

கர்நாடகா வந்தடைந்த சோனியா காந்தி!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த மாதம் 7ம் தேதி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான இந்திய ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரியில் தொடங்கினார்.  

கேரளா, தமிழ்நாடு மாநிலங்களைக் கடந்து தற்போது பாஜக ஆளும் மாநிலமான கர்நாடகாவில் நடந்து கொண்டிருக்கிறது.  இந்திய ஒற்றுமை பயணத்தில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கர்நாடகா வந்தடைந்தார்.  

கர்நாடக மாநிலம் வந்தடைந்த சோனியா காந்தி பேகூர் கிராமத்தில் உள்ள பீம்னகோலி கோவிலில் வழிபாடு நடத்தினார். எச்.டி. கோட் சட்டமன்றத் தொகுதிக்கு சோனியா காந்தி வருகை புரிந்துள்ளார்.  அவர் இந்திய ஒற்றுமை பயணத்தின் 29ம் நாள் பயணத்தில் இணைகிறார்.

இதையும் படிக்க: குஜராத்தின் போர்பந்தரில் ரூ.1000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!!!