குஜராத்தின் போர்பந்தரில் ரூ.1000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!!!

குஜராத்தின் போர்பந்தரில் ரூ.1000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!!!

குஜராத்தில் உள்ள போர்பந்தர் துறைமுகத்தில் இருந்து ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். ஆதாரங்களின்படி, இது சமீபத்தில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்களிலேயே மிகப்பெரிய அளவு  என்று கூறப்படுகிறது. 

போதைப்பொருள் கொண்டு செல்வதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கடற்படை அதிகாரிகள் படகை தடுத்து நிறுத்தியுள்ளனர். ​​படகை சோதனையிட்டபோது அதில் அதிக அளவிலான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட படகில் இருந்த நான்கு ஈரானியர்களையும் இரண்டு பாகிஸ்தானியர்களையும் கடற்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் அளவு 200 கிலோ என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், மற்றொரு வழக்கில், கடற்படை மற்றும் என்சிபி கூட்டு நடவடிக்கையில் 6 கோடி மதிப்புள்ள போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க: ஆந்திர முதலமைச்சரின் புதிய தேசிய கட்சி!! வாக்காளர்களுக்கு மது, உயிருள்ள கோழி!!