ஆந்திர முதலமைச்சரின் புதிய தேசிய கட்சி!! வாக்காளர்களுக்கு மது, உயிருள்ள கோழி!!

ஆந்திர முதலமைச்சரின் புதிய தேசிய கட்சி!! வாக்காளர்களுக்கு மது, உயிருள்ள கோழி!!

தெலுங்கானா முதலமைச்சரும், டிஆர்எஸ் தலைவருமான சந்திரசேகர் ராவ்வின் தேசிய கட்சி தொடங்கும் அறிவிப்பை முன்னிட்டு உள்ளூர் தலைவர் ஒருவர் நடத்திய பொது நிகழ்ச்சி சர்ச்சையில் சிக்கியுள்ளது.

வாரங்கல் டிஆர்எஸ் தலைவர் ராஜனாலா ஸ்ரீஹரி என்பவர் மதுபாட்டில்கள் மற்றும் பிராய்லர் கோழியை பொது இடங்களில் விநியோகம் செய்துள்ளார். அதே பகுதியில் சந்திரசேகர் ராவ் மற்றும் அவரது மகனும் கட்சித் தலைவருமான கே.டி.ராமராவ் ஆகியோரின் கட்அவுட் வைக்கப்பட்டிருந்தது என்பது கவனிக்கத்தக்கது.

ஸ்ரீஹரியின் மதுபாட்டில்கள் மற்றும் பிராய்லர் கோழி வழங்கும் விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 200 மதுபாட்டில்களும் 200 உயிருள்ள கோழியும் உள்ளூர் மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த சம்பவத்தின் வீடியோ வைரலானதை அடுத்து, ஸ்ரீஹரிக்கும் கட்சிக்கும் எதிராக பல விமர்சனங்கள் எழுந்துள்ளன.