பீகார் மாநிலம் பூர்னியாவுக்கு இரண்டு நாள் பயணமாக வந்தடைந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
ஐக்கிய ஜனதா தளத்துடனான கூட்டணி பிளவிற்கு பிறகு பீகார் மாநிலத்தின் பூர்னியாவில் நடைபெற்ற "ஜன பவ்னா மகாசபா” வில் கலந்து கொண்டு பேசினார் அமித் ஷா.
பிரதமர் ஆசையில்...:
”நிதிஷ் குமார் பிரதமராகும் ஆசையில் அவர் பிறந்த கட்சியை விட்டு பிரிந்து எதிர் கட்சியான காங்கிரஸ் கூட்டணியான மகாகத்பந்தனில் இணைந்துள்ளார். கட்சி மாறினால் பிரதமராகும் கனவு நினைவாகுமா? பீகாரில் தொடர்ந்து இந்த கூட்டணி ஆட்சி நடத்த முடியுமா?” எனக் கேள்வியெழுப்பியுள்ளார் அமித் ஷா.
மேலும் தெரிந்துகொள்க: வெற்றி பெறுமா மகாகத்பந்தன் 2.0?
பீகாரில் மகாகத்பந்தன் கூட்டணி ஆட்சி வந்ததிலிருந்து பயமான சூழலே நிலவுகிறது என அமித் ஷா கூறியுள்ளார்.
“இன்று நான் இங்கு இருப்பது லாலுவுக்கும் நிதிஷுக்கும் வயிறு வலிக்கிறது. நான் மோதலை உருவாக்க வந்துள்ளதாக இருவரும் கூறுகிறார்கள். லாலு ஜி நான் மோதலை உருவாக்க வரவில்லை. அதை செய்ய நீங்கள் இருக்கும் போது அதை செய்ய நான் தேவை இல்லை. உங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள் அதை செய்துள்ளீர்கள். இனியும் செய்வீர்கள்” என பதிலளித்துள்ளார் அமித் ஷா.
அரசியல் கூட்டணிகளை மாற்றிக் கொண்டால் நிதிஷ் குமார் பிரதமராக முடியுமா? அரசியலுக்கு வந்தது முதல் பலருக்கும் துரோகம் செய்துள்ளார் நிதிஷ். பிரதமர் கனவில் எங்கள் முதுகில் குத்திய நிதிஷ் விரைவில் உங்கள் முதுகிலும் குத்தலாம். ஜாக்கிரதை லாலு ஜி” எனக் கூறியுள்ளார் அமித் ஷா.