பிரீபெய்டு மின் மீட்டர் திட்டத்தில் மிகப்பெரிய ஊழல்...குற்றம் சாட்டிய நாராயணசாமி...!

பிரீபெய்டு மின் மீட்டர் திட்டத்தில் மிகப்பெரிய ஊழல்...குற்றம் சாட்டிய நாராயணசாமி...!

Published on

புதுச்சேரியில் பிரீபெய்டு மின் மீட்டர் திட்டத்தில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது என்று முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

புதுச்சேரியில் உள்ள மின்துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகிறது. இதனிடையே ப்ரீ-பெய்டு மின் கட்டணம் செலுத்த அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது.

இந்நிலையில் புதுச்சேரியில் பிரீபெய்ட் மீன் மீட்டர் திட்டத்தை ரத்து செய்யக்கோரி இளைஞர் காங்கிரஸ்  சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட ஏராளமானவர்கள் பங்கேற்று மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, பிரீபெய்டு மின் மீட்டர் திட்டத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாக குற்றம் சாட்டினார். தொடர்ந்து, ஊழல் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com