சிசோடியாவுக்கு வழங்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸ்!!!!

சிசோடியாவுக்கு வழங்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸ்!!!!

மாநில அரசுகளுடன் மோதல் போக்கினை மட்டுமே மத்திய அரசு கடைபிடிக்குமேயானால் நாடு வளார்ச்சிக் காணுவது எவ்வாறு என்று  ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய-மாநில அரசு மோதல் போக்கு:

சாமான்ய மனிதர்கள் பணவீக்கம், வேலைவாய்ப்பின்மையுடன் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் மத்திய அரசு மாநில அரசுகளுடன் கைகோர்த்து இப்பிரச்சினைகளுக்கு  தீர்வு  காணாமல், மாநில அரசுகளுடன் மோதல் போக்கினைக் கடைப்பிடித்து  வருவது எந்த வகையில் நியாயம் என கெஜ்ரிவால் வினவியுள்ளார்.

சோதனை விளையாட்டு:

ஒவ்வொரு நாள் காலையிலும் சிபிஐ, அமலாக்கப்பிரிவு போன்ற அமைப்புகள் சோதனை என்ற விளையாட்டை  ஆரம்பித்து விடுகிறது என்றும் இப்படியே சென்றால் தேசம் எப்படி வளர்ச்சி காணும் என்றும் அவர்  கேள்வி எழுப்பியுள்ளார்.

லுக் அவுட் நோட்டீஸ்:

முன்னதாக புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்திய விவகாரத்தில் டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவுக்கு  சொந்தமான இடங்களில்  சிபிஐ சோதனை நடத்தியது. அத்துடன் மணீஷ் உள்ளிட்ட 15  பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் வெளிநாடு  தப்பி செல்லாத வகையில் அவர்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

மணீஷ் சிசோடியா கண்டனம்:

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மணிஷ் சிசோடியா, தான் வீட்டை விட்டு எங்கும் போகவில்லை என கூறியுள்ளார். டெல்லியில் சுதந்திரமாக சுற்றி கொண்டுள்ளதாக டிவிட்டரில் பதவிவிட்டுள்ள மணீஷ்,”இது என்ன வித்தை, மோடி ஜி? எனவும்  எங்கு வரவேண்டும் என்று சொல்லுங்கள்? தன்னால் உங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை" என்றும் காட்டமாக  பதிவிட்டுள்ளார். மேலும் 2024 ல் பிரதமர் மோடிக்கு மக்கள் லுக் அவுட் நோட்டீஸ் கொடுப்பார்கள் எனவும் மணிஷ் சிசோடியா ஆவேசம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்கஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு தாயின் மடியில் ஓய்வெடுக்கிறார் பூஜா கௌட் .......