சாலைகளில் உருண்டு வரும் பாறைகள்...7 கி.மீ. தூரம் அணிவகுக்கும் வாகனங்கள்...!

சாலைகளில் உருண்டு வரும் பாறைகள்...7 கி.மீ. தூரம் அணிவகுக்கும் வாகனங்கள்...!

இமாச்சல் பிரதேச மாநிலம் மாண்டி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

வட மாநிலங்களில் சில தினங்களாக கனமழையானது கொட்டித் தீர்த்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இமச்சாலப்பிரதேசத்தில் மாண்டி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. இதனிடையே கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். 

இதையும் படிக்க : திடீர் மேக வெடிப்பால் கொட்டித் தீர்த்த கனமழை...சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளநீர்!

இந்நிலையில், மாண்டில்  திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால் சண்டிகர் – மணாலி இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாறைகள் சாலைகளில் உருண்டு கிடப்பதால் 7  கிலோ மீட்டருக்கும் மேலாக வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தொடர்ந்து, மீட்பு நடவடிக்கைகளில் தீயணைப்புத்துறை மற்றும் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.