மகாராஷ்டிரா சைபர் செல் எஸ்பி சஞ்சய் ஷித்ரே தகவல் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் மடிக்கணினி போன்றவை மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர காவல்துறையின் சைபர் துறையானது ரஹுரி மகாத்மா பூலே பல்கலைக்கழக மாணவர் ஒருவரை கைது செய்துள்ளது. முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் உள்ளிட்ட பல அரசியல் சாசனப் பதவிகளை வகிப்பவர்களின் ட்விட்டர் பக்கத்தை ஹாக் செய்து சில பெண் பத்திரிகையாளர்களைக் குறித்து ஆட்சேபனைக்குரிய பதிவுகளை ட்விட்டர் பக்கத்தில் மாணவர் ஒருவர் பதிவிட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து மகாராஷ்டிரா சைபர் செல் எஸ்பி சஞ்சய் ஷித்ரே, ”கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் மடிக்கணினி போன்றவை மீட்கப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த விவகாரத்தில் இன்னும் விசாரணை நடந்து வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர் நவம்பர் 2ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.