கர்நாடகாவில் உள்ள 224 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. ஊழல் பிரச்சினையை முன்னிறுத்தி தேர்தலில் போட்டியிடுவதாக ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சியை பொருத்தவரை பெரும்பாலான வேட்பாளர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளது. விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் எனவும் கூறியுள்ளது ஆம் ஆத்மி. 224 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளரும், கர்நாடக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான பிருத்வி ரெட்டி தெரிவித்துள்ளார். கிராம சம்பர்க் அபியான் மூலம் மாநிலத்தின் 170 தொகுதிகளில் பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது.
ஊழலை கட்டுப்படுத்தவும், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவும் மாநிலத்தின் மூன்று பெரிய கட்சிகள் தவறிவிட்டன எனக் கூறியுள்ளார் பிருத்வி ரெட்டி. கர்நாடகாவில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் குறித்து, ஆம் ஆத்மி கட்சி கூறுகையில் வெற்றி பெறுவதற்காக போராடி வருவதாகவும், வரவிருக்கும் தேர்தலில் வெற்றியை பதிவு செய்யும் என்றும் ரெட்டி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.