உலகை அச்சுறுத்த போகும் உணவு பற்றாக்குறை...என்ன செய்யபோகிறது இந்தியா!!!

உலகை அச்சுறுத்த போகும் உணவு பற்றாக்குறை...என்ன செய்யபோகிறது இந்தியா!!!
Published on
Updated on
1 min read

ஸ்வீடனும் இந்தியாவும் உக்ரைன் போரினால் தீவிரமடைந்துள்ள உலகளாவிய உணவுப் பற்றாக்குறை சீரழிவு குறித்து கவலை கொண்டுள்ளன.

உக்ரைன் -ரஷ்யா போர் தாக்கம்:

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நடந்து வரும் போர் உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.  ஐரோப்பா முதல் ஆசியா வரை, பணவீக்கத்திற்கான காரணம் போர் எனக் கருதப்படுகிறது.  அதே சமயம், உலக அளவில் உணவுப் பாதுகாப்பு குறைந்து வருவது குறித்து இந்தியாவும், ஸ்வீடனும் கவலை தெரிவித்துள்ளன.  

கருங்கடல் போக்குவரத்து:

இந்தியாவும் ஸ்வீடனும் கருங்கடல் வழி தானிய போக்குவரத்திற்கான முன்முயற்சியை வரவேற்றுள்ளன.  இது போரினால் பாதிக்கப்பட்ட நாட்டிலிருந்து தானியங்கள், உணவு மற்றும் உரங்களை ஏற்றுமதி செய்வதற்கு பாதுகாப்பான பாதையை எளிதாக்குகிறது.

ரவீந்திரன் அறிக்கை:

ஐநா பொதுச் சபையில் இந்தியா மற்றும் ஸ்வீடன் சார்பில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் துணை நிரந்தரப் பிரதிநிதி ஆர்.ரவீந்திரன், சிறப்புப் பொருளாதார உதவி உள்ளிட்ட ஐ.நா மனிதாபிமான மற்றும் பேரிடர் நிவாரண உதவிகளின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவது குறித்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  

அறிக்கை கூறுவதென்ன?:

உக்ரைனில் நடந்த போரினால் உலக உணவுப் பாதுகாப்பின் சீரழிவு குறித்து சுவீடனும் இந்தியாவும் குறிப்பாக கவலை கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில் நவம்பர் 17 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட கருங்கடல் வழி தானிய போக்குவரத்திற்கான முன்முயற்சியை இந்தியாவும் ஸ்வீடனும் முழுமையாக ஆதரிப்பதாகவும்,  120 நாட்களுக்கு அதன் நீட்டிப்பை வரவேற்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.  அதாவது உக்ரைனின் தானியங்கள், உணவுப் பொருட்கள் மற்றும் உர ஏற்றுமதிகள் கருங்கடல் துறைமுகங்கள் மூலம் தொடரலாம் என்பதே அது.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com