அமரராஜா பேட்டரி தொழிற்சாலையில் தீ விபத்து...

சித்தூரில் பேட்டரி தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது.

அமரராஜா பேட்டரி தொழிற்சாலையில் தீ விபத்து...

ஆந்திரா | சித்தூர் மாவட்டம் மோர்தான பள்ளி கிராமம் சமீபத்தில் பிரபல பேட்டரி தயாரிப்பு நிறுவனமான அமரராஜா பேட்டரிஸ் நிறுவனத்தின் தொழிற்சாலை உள்ளது.

சற்றுமுன் அந்த தொழிற்சாலையில் திடீரென்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தொழிற்சாலையில் ஒரு பகுதியில் மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்து பெரும் தீவிபத்தாக மாறி தொழிற்சாலையின் பல பகுதியில் பற்றி எரிகின்றன.

தீ விபத்து பற்றிய தகவல் அறிந்து சித்தூர் மற்றும் திருப்பதி ஆகிய ஊர்களில் இருந்து நான்கு தீயணைப்பு வாகனங்களில் விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்தி அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த பால் வேன்...