ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சிக்கியுள்ள மகனை மீட்டுத்தர போராடும் தந்தை...!

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சிக்கியுள்ள மகனை மீட்டுத்தர போராடும் தந்தை...!

இந்த வழக்கில் தூதரக அணுகலைப் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.  இதனுடன் நீதிமன்ற தீர்ப்பின் நகலையும் தர வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. 

நோட்டீஸ் அனுப்பிய உயர்நீதிமன்றம்:

டெல்லி உயர்நீதிமன்றம் வெளியுறவு அமைச்சகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  ஐக்கிய அரபு எமிரேட்ஸில்  சிறையில் அடைக்கப்பட்டுள்ள தந்தையின் மனுவின் அடிப்படையில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.  மனுதாரரின் மகன் குறித்த அனைத்து தகவல்களையும் சேகரிக்குமாறு வெளியுறவு அமைச்சகத்துக்கு நீதிபதி பிரதீபா எம் சிங் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.  ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள இந்திய தூதரகத்தை உள்ளூர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைத்து மனுதாரரின் மகன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பான அனைத்து தகவல்களையும் சேகரிக்க உயர்நீதிமன்றம் கோரிக்கை வைத்துள்ளது. 

நடந்தது என்ன?:

மனு தாக்கல் செய்தவரது மகன் ஒரு மென்பொருள் பொறியாளர் என்றும், 20 ஜூலை 2019 இரவு முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்த அவரை குறித்த தகவல் எதுவும் தெரியவில்லை என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.  விசாரணையில், காணாமல் போன இளைஞர் ஐக்கிய அரபு அமீரக சிறையில் இருப்பது தெரியவந்துள்ளது.  இந்திய அதிகாரிகள் பல முயற்சிகளுக்குப் பிறகும், அவரது மகன் எந்த குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பதும் தெரியவில்லை என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. 

அரசு தரப்பில்:

பாதிக்கப்பட்ட இளைஞருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபெடரல் நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளதாக மத்திய அரசின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.  அவரை விடுதலை செய்ய வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.  இதனுடன் நீதிமன்ற தீர்ப்பின் நகலையும் தர வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.  இந்திய தூதரக அதிகாரிகள் மனுதாரரின் மகனை சிறையில் மூன்று முறை சந்தித்ததாகவும், தூதரக அதிகாரிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். 

மீட்டு தாருங்கள்:

இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையில் தண்டனை பெற்ற குற்றவாளிகளை இடமாற்றம் செய்யும் ஒப்பந்தம் உள்ளது.   தனது மகன் என்ன குற்றத்திற்காக சிறையில் உள்ளார் என்பது தனக்குத் தெரியாது என்றும், அவர் கைது செய்யப்பட்டிருப்பது சட்டவிரோதமானது என்றால், அவரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர் ஏதேனும் குற்றம் செய்திருந்தால், அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுதாரர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  பன்னீர் செல்வம் பூங்காவில் எடப்பாடி....!