ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல், வரும் 27ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி என 4 முனைப் போட்டி நிலவுகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வேட்பாளருக்கான வேட்பு மனு தாக்கலில் இதுவரை 83 மனுக்கள் ஏற்கப்பட்டிருந்த நிலையில், 6 பேர் வேட்புமனுவை வாபஸ் பெற்றதால் 77 வேட்புமனுக்கள் கொண்ட இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகியிருந்தது.
இதற்கிடையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அனைத்து கட்சிகளும் இறங்கிய நிலையில், அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து, எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பிப்ரவரி 15, 16, 17, 24, 25 ஆகிய 5 தேதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபடுவானார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, நேற்று தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய எடப்பாடி பழனிச்சாமி அவரது தேர்தல் பிரச்சாரத்தை பன்னீர்செல்வம் பூங்காவில் தொடங்கியுள்ளார். அவரது கட்சி வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.
-நப்பசலையார்
இதையும் படிக்க: வாக்குப்பதிவில் சாதனை புரிய அழைப்பு விடுத்த பிரதமர் மோடி!!