பள்ளிச்சீருடையில் சிறுபிள்ளைகளைப் போல தி.மு.க. உறுப்பினர்கள்....எதற்காக?!!

பள்ளிச்சீருடையில் சிறுபிள்ளைகளைப் போல குதூகலமாய் துள்ளித்திரிந்த புதுச்சேரி மாநில தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள்.

பள்ளிச்சீருடையில் சிறுபிள்ளைகளைப் போல தி.மு.க. உறுப்பினர்கள்....எதற்காக?!!

புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை, புத்தகங்கள் வழங்க வலியுறுத்திய தி.மு.க. எம். எல்.ஏ.க்கள் பள்ளி சீருடை அணிந்தே வந்ததால் சட்டப்பேரவையில் சிரிப்பலை உண்டானது. இன் பண்ணிய ஷர்ட்டும், வகிடு எடுத்த தலைமுடியுமாய் குழந்தைப் பருவத்துக்கே சென்ற எம். எல்.ஏ.க்கள் குறித்த ஒரு சிறப்பு தொகுப்பு இதோ.. 

சீருடை அணிந்து..:

பொதுவாக தமிழ்நாட்டில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடக்கிறதென்றால் அதில் கலந்து கொண்ட எதிர்க்கட்சிகள் ஏதேனும் எதிர்ப்புகளை எழுப்பி, சட்டமன்றத்தல் இருந்து வெளிநடப்பு செய்வது வழக்கம். அதன்படி புதுச்சேரியில் சட்டமன்றத்துக்கு செல்லவிருந்த எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் பள்ளி சீருடை அணிந்து கொண்டு சென்ற வினோத சம்பவம் நடந்தேறியது. 

மீண்டும் பள்ளிக்கு போகலாம்..

சட்டமன்றக்கூட்டத்தொடர் சரியாக 9.30 மணியளவில் கூடிய நிலையில் ஆளுங்கட்சியின் தவறுகளை சுட்டிக் காட்டும் விதமாக எதிர்க்கட்சி கையாண்ட புதிய பாணிதான் இது.  புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளிகளில் சீருடைகள், புத்தகங்கள் வழங்குவதற்கு தாமதமாகி வந்தது. 

இதை எதிர்க்கும் விதமாக தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் இணைந்து சிறு பிள்ளைகள் போல பள்ளிச்சீருடைகள் அணிந்து, ஐ.டி.கார்டு, தோளில் பேக் ஆகியவற்றை மாட்டிக் கொண்டு சைக்கிளில் புறப்பட்டனர். 

திடீரென எழுந்த அச்சம்:

பள்ளி மாணவர்களுக்கு அறிவித்த திட்டங்களை செயல்படுத்த நினைத்த எம். எல்.ஏ.க்களின் முயற்சி என்னவோ வித்தியாசமாகவே இருந்தாலும், அங்கு கூடியிருந்தவர்கள் அனைவருக்கும் ஒரு வித அச்சம் இருந்து வந்தது. 

எங்கே.. குழந்தை பருவத்தில்தானே இருக்கிறோம் என்ற எண்ணத்தில் சாலையிலேயே அழுது புரண்டு ஆர்ப்பாட்டம் செய்வார்களோ.. சார்.. என்னை கிள்ளிட்டான் சார் என சபாநாயகரிடம் புகார் சொல்லி விடுவாரோ.. என்றே அனைவரும் தங்களுக்குள் சொல்லிக் கொண்டனர். 

வினோத செயல்பாட்டில் இறங்கிய இவர்களின் ஆர்வம் பள்ளி சீருடை அணிந்து கொண்டதோடு இருந்தால் சரி.. 

-நப்பசலையார்

இதையும் படிக்க:  பா.ஜ.க. மீது அதிரடி கருத்து தெரிவித்த இபிஎஸ் தரப்பின்  சி.பொன்னையன்.......