இன்று மாலை 7 மணிக்கு...கார்கே தலைமையில் காங்.எம்பிக்கள் பேரணி...ஜெய்ராம் ரமேஷ் அறிவிப்பு!

இன்று மாலை 7 மணிக்கு...கார்கே தலைமையில் காங்.எம்பிக்கள் பேரணி...ஜெய்ராம் ரமேஷ் அறிவிப்பு!

டெல்லி செங்கோட்டையில் இருந்து காங்கிரஸ் எம்பிக்களின் பேரணி நடைபெறுவதாக கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

அனைத்து திருடர்களின் பெயரும் மோடி என்றே முடிகிறது என கடந்த 2019ம் ஆண்டு ராகுல்காந்தி பேசியதை சாடி, அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து அவரது எம்பி பதவி, தகுதிநீக்கம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிட்ட மக்களவை செயலகம், வரும் 22ம் தேதிக்குள் அரசுக்குடியிருப்பை காலி செய்யுமாறு அவருக்கு நோட்டீசும் அனுப்பியுள்ளது. இதையெல்லாம் காங்கிரஸ் கட்சியினர் எதிர்த்து வருகின்றனர். 

இதையும் படிக்க : சபாநாயகர் மீது காகிதங்களை கிழித்து வீசியெறிந்து ஆவேசம்...இரு அவைகளும் ஒத்திவைப்பு!

அந்த வகையில், எம்பி பதவியில் இருந்து ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டது, அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு அனுமதியளிப்பது தொடர்பான தொடர் அமளியால் நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்கி வருகிறது.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில், இன்று மாலை 7 மணிக்கு காங்கிரஸ் எம்பிக்கள் பேரணி நடைபெறும் எனவும், அடுத்த 30 நாட்களில் ஜெய் பாரத் சத்தியாகிரகம் என்ற பெயரில் நாடு முழுவதும் காங்கிரஸ் பேரணி நடைபெறும் எனவும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்  அறிவித்துள்ளார்.