தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்த சே குவேரா மகள்....எதற்காக?

தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்த சே குவேரா மகள்....எதற்காக?

திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வந்த அலீடா, செவ்வாய்கிழமை நடைபெறும் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ளவும், புதன்கிழமை நடைபெறும் பொது வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் வாய்ப்புள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு வருகை:

கியூபா புரட்சியாளர் ஏர்னஸ்டோ 'சே' குவேராவின் மகள் அலிடா குவேரா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு பிரிவு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் பயணமாக சென்னை வந்துள்ளார்.  அவருக்கு விமான நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.பாலகிருஷ்ணன், மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.

நிகழ்ச்சிகள்:

சிபிஐ(எம்) படி, திருவனந்தபுரத்தில் இருந்து இங்கு வந்த அலீடா, செவ்வாய்கிழமை கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளவும், புதன்கிழமை பொது வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் வாய்ப்புள்ளது.

பங்கேற்கவுள்ளோர்:

இந்த பொது நிகழ்ச்சியில் திமுக எம்பி கனிமொழி, விசிகே நிறுவனரும் மக்களவை உறுப்பினருமான தொல் திருமாவளவன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.  அலீடாவின் மகள் எஸ்டெபானியா குவேராவும் விழாவில் கௌரவிக்கப்படவுள்ளார்.

-நப்பசலையார் 

இதையும் படிக்க:   பாஜகவின் தலைமை பதவி வகிக்க போவது யார்?!!