பாஜகவின் தலைமை பதவி வகிக்க போவது யார்?!!

பாஜகவின் தலைமை பதவி வகிக்க போவது யார்?!!

பாஜக தலைவர் ஜே.பி நட்டாவின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது.  இந்த சூழ்நிலையில் ஜே.பி.நட்டாவின் பதவிக்காலம் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படலாம் என்ற விவாதம் பாஜகவினரிடையே எழுந்திருந்த நிலையில் நட்டாவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.  

அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடக்கவுள்ள சூழ்நிலையில், புதிய தலைவரிடம் தேர்தல் பொறுப்பை ஒப்படைப்பதற்கு பதிலாக, ஜேபி நட்டாவின் பதவிக்காலத்தை பாஜக நீட்டித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை நட்டாவின் தலைமை பதவி நீட்டிக்கப்படுவதாக பாஜகவின் மூத்த தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   கிம்மின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்க தயாராகவுள்ள அமெரிக்கா.....ஓடவும் முடியாது! ஒளியவும் முடியாது!