பஞ்சாப் உள்ளிட்ட 4 மாநிலங்களில் இன்று இடைத்தேர்தல்...விறுவிறு வாக்குப்பதிவு!

பஞ்சாப் உள்ளிட்ட 4 மாநிலங்களில் இன்று இடைத்தேர்தல்...விறுவிறு வாக்குப்பதிவு!

பஞ்சாப்பின் ஜலந்தர் நாடாளுமன்ற தொகுதி உள்பட 4 மாநிலங்களில் இடைத்தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்றபோது காங்கிரஸ் எம்பி சங்கோத் சிங் சவுத்ரி நெஞ்சுவலியால் உயிரிழந்த நிலையில், ஜலந்தர் தொகுதி காலியானது. தொடர்ந்து 19 பேர் போட்டியிடும் இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதில் ஆம்ஆத்மி, காங்கிரஸ், பாஜக, ஷிரோமணி அகாளிதளம் கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவுவது குறிப்பிடத்தக்கது. 

இதேபோல் உத்தரப்பிரதேசத்தில் முன்னாள் எம்எல்ஏ அப்துல்லா அசாம் கானுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதால், ராம்பூரின் ஸ்வார் சட்டப்பேரவைத் தொகுதிக்கும் இன்று தேர்தல் நடைபெறுகிறது. காலை 9 மணி நேர நிலவரப்படி 7 புள்ளி 93 சதவீத வாக்குகள் அங்கு பதிவானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : விறுவிறு வாக்குப்பதிவு... காலை 11 மணி நிலவரப்படி பதிவான வாக்கு சதவீதம்...!

உத்தரப்பிரதேசத்தின் சப்னாய் தொகுதி எம்பியும் மதச்சார்பற்ற அப்னா தள கட்சியைச் சேர்ந்தவருமான ராகுல் கோல் உயிரிழந்த நிலையில், அவரது மனைவி கீர்த்தி கோலை இன்று நடைபெறும் இடைத்தேர்தலில் அக்கட்சி நிறுத்தியுள்ளது. 9 ணி நிலவரப்படி 7 புள்ளி 93 சதவீத வாக்குகள் அங்கு பதிவாகியுள்ளது. 

அதேபோன்று, ஒடிசாவின் ஜர்சுகுடா தொகுதியின் எம்எல்ஏ கொலை செய்யப்பட்ட நிலையில், அத்தொகுதிக்கும் இன்றைக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் மும்முனை போட்டியாக பிஜேடி, காங்கிரஸ், பாஜக மூன்றும் போட்டியிட்டுள்ளது. 9 மணி நிலவரப்படி இங்கு 9 புள்ளி 75 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இதேபோல, மேகாலயாவின் சஹியோங் சட்டப்பேரவைத் தொகுதிக்கும் இன்று இடைத்தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.