
டில்லியில் பாஜகவுக்கு டிஆர்எஸ் உதவுகிறது. தெலுங்கானாவில் டிஆர்எஸ்க்கு பாஜக உதவுகிறது. இரு கட்சிகளும் ஜனநாயகத்துக்கு எதிரானவை. இரண்டு கட்சிகளும் பண அரசியலில் ஈடுபடுகின்றன.
ராகுல் காந்தி நான்கு நாட்கள் இடைவெளிக்குப் பிறகு நாராயண்பேட்டை மாவட்டத்தில் உள்ள மகதாலில் இருந்து 'இந்திய ஒற்றுமை பயணத்தை’ மீண்டும் தொடங்கினார். தெலுங்கானா மாநிலம் நாராயண்பேட் மாவட்டத்தில் உள்ள யெலிகண்ட்லாவுக்கு ராகுல் காந்தி மூன்றாவது நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று இந்த பயணம் மஹ்பூப்நகரில் நிறுத்தப்படும்.
இந்திய ஒற்றுமை பயணம் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கியது. செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்திய ஒற்றுமை பயணம் 3,570 கி.மீ. தொலைவில் காஷ்மீரில் முடிவடையும். இது 12 மாநிலங்கள் வழியாக செல்லும். இந்திய வரலாற்றிலேயே எந்தவொரு அரசியல்வாதியும் மேற்கொண்ட மிக நீண்ட பயணமாக இதுவாக இருக்கும்.
தெலுங்கானா மாநிலம் நாராயண்பேட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, தெலுங்கானா ராஷ்டிர சமிதி மற்றும் பாரதிய ஜனதா கட்சியை கடுமையாக தாக்கி பேசியுள்ளார். இரு கட்சிகளும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்று தெரிவித்துள்ளார்.
அவர்கள் ஜனநாயக விழுமியங்களுக்கு எதிரானவர்கள் மற்றும் பண அரசியலில் ஈடுபடுகின்றனர் எனவும் டிஆர்எஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் விலை பேசி அரசுகளை கவிழ்ப்பதாகவும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாஜகவும் டிஆர்எஸ்ஸும் இரண்டுமே ஒன்றுதான் என்று கூறியுள்ளார் ராகுல். இதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார் ராகுல்.
டெல்லியில் பாஜகவுக்கு டிஆர்எஸ் உதவுகிறது எனவும் தெலுங்கானாவில் டிஆர்எஸ்க்கு பாஜக உதவுகிறது எனவும் ராகுல் விமர்சித்துள்ளார். இரு கட்சிகளும் ஜனநாயகத்துக்கு எதிரானவை எனவும் இரண்டுமே பண அரசியலில் ஈடுபடுகின்றன எனவும் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி பண அரசியல் செய்கிறார்கள் எனவும் கூறியுள்ளார் ராகுல்.