நீங்க மட்டும் தான் போவீங்களா...நாங்களும் போவோம்...காங்கிரஸை தெறிக்கவிட்ட பொம்மை!!!

நீங்க மட்டும் தான் போவீங்களா...நாங்களும் போவோம்...காங்கிரஸை தெறிக்கவிட்ட பொம்மை!!!

கர்நாடகாவில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.  இதைக் கருத்தில் கொண்டு அக்டோபர் மாதம் ராய்ச்சூர் மாவட்டத்தில் இருந்து 'மக்கள் இணைப்பு பயணத்தை' பாஜக தொடங்கியது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக மாநிலத்தில் ஆளும் கட்சிக்கு களம் தயாரிப்பதே இதன் நோக்கமாகும்.
 
மக்கள் இணைப்பு பயணம்:

கர்நாடகாவில் பாஜகவின் ”மக்கள் இணைப்பு பயணமானது” மக்கள் மத்தியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆதரவு கிடைத்து வருவதாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். அக்டோபர் மாதம் ராய்ச்சூர் மாவட்டத்தில் இருந்து ''மக்கள் இணைப்பு பயணத்தை' பாஜக ஆரம்பித்தது.  வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக மாநிலத்தில் ஆளும் கட்சிக்கு களம் தயாரிப்பதே இதன் நோக்கம்.

திட்டங்கள் வழி:

ஹூப்ளியில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பொம்மை, சட்டசபை தேர்தலுக்காக, நாங்கள் மக்களுக்கு சேவைகள் செய்வதன் மூலம் அவர்கள் நடுவில் இருக்கிறோம்.  நமது 'மக்கள் இணைப்பு பயணம் ஏற்கனவே மாநிலத்தின் பல பகுதிகளை கடந்து சென்றுள்ளது” என்று கூறிய அவர் ”டிசம்பரில் ''மக்கள் இணைப்பு பயணத்தின் கீழ் மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் செல்வோம்.” எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ”மக்களை சென்றடைந்த மத்திய, மாநில அரசின் திட்டங்கள் வழியாக மக்களை நேரிடையாக சென்றடைந்துள்ளோம்.  அதே சமயம், இந்தத் திட்டங்களில் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த முயற்சித்து வருகிறோம்.” எனவும் கூறியுள்ளார்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  பாஜகவின் இரும்பு கோட்டையில் காங்கிரஸின் அசைக்க முடியாத கோட்டை!!!