இந்தியா: 120 நாட்களில் 125 நகரங்களுக்கு 5ஜி அறிமுகம்...பிரதமர் மோடி பெருமிதம்!

இந்தியா: 120 நாட்களில் 125 நகரங்களுக்கு 5ஜி அறிமுகம்...பிரதமர் மோடி பெருமிதம்!

120 நாட்களில் 125 நகரங்களுக்கு 5ஜி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் புதிய சர்வதேச தொலைத்தொடர்பு யூனியன் அலுவலகம் மற்றும் புத்தாக்க மையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதையடுத்து நிகழ்வில் பேசிய அவர், கடந்த 120 நாட்களில் 125 நகரங்களுக்கு 5ஜி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தவர், 5ஜி கொண்டுவரப்பட்ட 6 மாதங்களில் இந்தியா 6ஜி குறித்து பேசத்தொடங்கி விட்டதாகவும், 100 கோடி மொபைல் போன் இணைப்புடன் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா திகழ்வதாகவும் கூறினார்.

இதையும் படிக்க : கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாட தீர்மானம்...!

2014ம் ஆண்டில் 25 கோடியாக இருந்த இணையப் பயனாளர்களின் எண்ணிக்கை, 85 கோடியாக அதிகரித்துள்ளதாகவும், இன்டர்நெட் வசதியை நகர்ப்புறங்களை விட கிராமப்புறத்தில் அதிக பேர் உபயோகப்படுத்துவதாகவும் பிரதமர் மோடி கூறினார்.