வெளியானது அசரவைக்கும் ‘லைகர்’ ட்ரெயிலர்; விஜய் தேவர்கொண்டாவை முந்திய ரம்யா கிருஷ்ணன்:

விஜய் தேவர்கொண்டா நடிப்பில் உருவான லைகர் படத்தின் ட்ரெயிலர் வெளியான நிலையில், படத்தில் விஜயை விட ரம்யா கிருஷ்ணனுக்கு தான் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

வெளியானது அசரவைக்கும் ‘லைகர்’ ட்ரெயிலர்; விஜய் தேவர்கொண்டாவை முந்திய ரம்யா கிருஷ்ணன்:

பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான கரன் ஜோஹரின் தர்மா ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் வெளியாக இருக்கும், பான் இந்தியா படமான லைகர் படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெயிலர் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. விஜய் தேவர்கொண்டா, அனன்யா பாண்டே நடிப்பில், ஒரு கமெர்சியல் சண்டை படமாக உருவாகியுள்ள இந்த படத்தில், லைகர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய் தேவர்கொண்டாவிற்கு ரம்யா கிருஷ்ணன் தாயாக நடித்திருக்கிறார்.

பல ஆண்டுகளாக தென்னிந்திந்திய திரையுலகில் வெர்சடைல் நடிகையாக வலம் வரும் நடிகை ரம்யா கிருஷ்ணன், சமீபத்தில், உலக அளவில் பிரசித்தி ஆனது பாகுபலி படங்கள் மூலமாகத் தான். சிவகாமி தேவியாக ஒரு தாயின் கர்வத்தை மிக அழகாக உலகுக்கு பிரதிபலித்த ரம்யா கிருஷ்ணனின் நடிப்பு, இந்த படத்தில் ஒரு சராசரி ஊர் தாயாக பிரதிபலிக்கப்படுகிறது.

“என் மகன் புலிக்கும் சிங்கத்திற்கும் பிறந்தவன். அவன் ஒரு கிராஸ்ப்ரீட் (crossbreed) எனக் கூறுவது, அவர் தனது மகன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. குத்துச்சண்டையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த கதையானது பல பயங்கரமான ஸ்டண்ட் காட்சிகள் கொண்டுள்லது என்பது ட்ரெயிலரை பார்க்கும் போதே தெரிகிறது. ஆனால், அந்த காட்சிகளில், விஜய் தேவர்கொண்டாவை ரசித்தவர்கள் விட, ரம்யா கிருஷ்ணனின் நடிப்பை ரசித்தவர்கள் தான் அதிகம் என்பதில் எவ்வளவும் ஐயம் இல்லை.

தனது மகன் லைகரின் சண்டையிடும் குணமும் முன்கோபமும், அவரது தாயிடம் இருந்து தான் வந்திருக்கிறது என்பதை மிக அழகாக காட்சியப்படுத்தி இருக்கிறார் இயக்குனர்.

பிரபல பாலிவுட் இயக்குனர் பூரி ஜகன்னாத், எழுதி இயக்கி தயாரித்துள்ள இந்த படமானது பான் இந்தியா படம் என்பதால், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாக இருக்கிறது.

ஜுனயித் சித்திக்கி படத்தொகுப்பு செய்த நிலையில், படத்தின் ஒரு ஒரு ஃப்ரேமிற்கும் அழகு சேர்த்துள்ளார் ஒளிப்பதிவாளர் விஷ்ணு ஷர்மா. தர்மா ப்ரொடக்‌ஷன்ஸ் மற்றும் பூரி கனெக்ட்ஸ் இணை தயாரிப்பில் வெளியாக இருக்கும் இந்த படத்தை, பூரி ஜகன்னாத், சார்மி, கரன் ஜோகர், அபூர்வா மேஹ்தா, ஹிரூ யாஷ் ஜோஹர் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

வருகிற ஆக்ஸ்டு மாதம் 25ம் தேதி உலக திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு இந்த ட்ரெயிலர் மூலம் அதிகரித்துள்லது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், படக்குழுவினருக்கு அனைவரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அது மட்டுமின்றி இதன் சிறப்பாம்சமே படத்தில் வரும் உலகளவில் பிரபலமான 90’ஸ் கிட்சுக்கு மிகவும் பிடித்த குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் தான். கோபமாக ரௌடிகளிடம், “நான் ஒரு ஃபைட்டர்” என விஜய் தேவர்கொண்டா திக்கும் போது, வருகைத் தரும் மைக் டைசன், “நீ ஃபைட்டர் என்றால், நான் யார்?” எனக் கேட்கும் ஒரே வசனம், பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது என்றே சொல்லவேண்டும்.