விஜய் தேவரகொண்டாவுடன் மோதும் குத்துச் சண்டை வீரர் மைக் டைசன்..!

அமெரிக்கா சென்றுள்ள நடிகர் விஜய் தேவரகொண்டா...!

விஜய் தேவரகொண்டாவுடன் மோதும் குத்துச் சண்டை வீரர் மைக் டைசன்..!

 பிரபல நட்சத்திர குத்துச் சண்டை வீரரான மைக்  டைசன் பிரபல தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டாவுடன் சண்டையிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ’வேர்ல்ட் பேமஸ் லவ்வர்’ படத்திற்கு பிறகு பிரபல தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டா இயக்குநர் பூரி ஜெகன்நாத்துடன் இணையவுள்ளார். அவர் இயக்கும் ’லைகர்’ என்னும் படத்தில் நடித்து வருகிறார் விஜய் தேவரகொண்டா. இப்படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோகர், நடிகை சார்மி, பூரி ஜெகன்நாத் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளிவர இருக்கும் இந்தப் படத்தில் பிரபல குத்துச் சண்டை வீரரான மைக் டைசன் நடிக்கவிருக்கிறார். 

மைக் டைசன் நடிக்கவிருக்கும் முதல் இந்தியப் படம் ’லைகர்’ என்பதால், இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா-மைக் டைசன் இடையிலான காட்சிகளை படமாக்க படக்குழு அமெரிக்கா சென்றுள்ளது. அங்குள்ள ஹோட்டலில் இயக்குநரும், விஜய் தேவரகொண்டாவும் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.