ஒரு பக்கம் கடன்...மறுபக்கம் வாய்தா...சிக்கி தவிக்கும் விஷால்..!

ஒரு பக்கம் கடன்...மறுபக்கம் வாய்தா...சிக்கி தவிக்கும் விஷால்..!

நடிகர் விஷால் தனது சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடன் பெற்ற நடிகர் விஷால்:

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவரான நடிகர் விஷால், தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் படத்தயாரிப்புக்காக, அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து, 21.29 கோடி ரூபாய் கடன் பெற்றிருந்தார்.

விஷாலின் கடனை திருப்பி செலுத்திய லைகா நிறுவனம்:

நடிகர் விஷால் பெற்ற கடன் தொகையை லைகா நிறுவனம் ஏற்றுக்கொண்டு, கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் செலுத்தியது. அப்போது, விஷாலும் லைகா நிறுவனமும் ஒப்பந்தம் மேற்கொண்டது. அந்த ஒப்பந்தத்தில், நடிகர் விஷால் கடன் தொகையை திருப்பி செலுத்தும் வரை, விஷால்,  விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்குவதாக உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.

லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கு:

இந்நிலையில் நடிகர் விஷால் மீது கடனை திருப்பி செலுத்தாதது தொடர்பாக லைகா நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கின் மனுவில், தங்கள் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை செலுத்தவில்லை என்றும், அந்த விவகாரத்தில் தங்களுக்கு இடையிலான ஒப்பந்தப்படி விஷால் நடந்து கொள்ளாமல், கடனையும் செலுத்தாமல் ’வீரமே வாகை சூடும்’ படத்தில் நடித்து வருவதாகவும், எனவே அப்படத்தை தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டது. 

விஷாலுக்கு உத்தரவிட்ட நீதிபதி:

அப்போது, இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 15 கோடி ரூபாயை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பெயரில் நிரந்தர வைப்பு நிதியாக செலுத்த விசாலுக்கு உத்தரவிட்டது. 

மேலும் படிக்க: https://malaimurasu.com/posts/cover-story/Transfer-of-Gratuity-Case-to-3-Judge-Bench

இன்று விசாரணை:

இந்தநிலையில், இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தபோது, நேரில் ஆஜரான நடிகர் விஷாலிடம்,   நீதிமன்ற உத்தரவை ஏன் பின்பற்றவில்லை என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

ஒத்திவைப்பு:

நீதிபதியின் கேள்விக்கு விஷால் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டும் ஏற்றுக்கொள்ளாத நீதிபதி,  விஷாலின் விளக்கத்தையும், சொத்து விவரங்கள் அடங்கிய பிராமண பத்திரத்தையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை செப்டம்பர் 9ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அத்துடன், அன்றைய தினமும் நீதிமன்றத்தில்  விஷால் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.