”2026 -ன் தமிழக முதல்வரே விஜய்!” மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் சலசலப்பு!

”2026 -ன் தமிழக முதல்வரே விஜய்!” மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் சலசலப்பு!

மதுரையில் நடிகர் விஜய் ரசிகர்கள் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பொதுமக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.  


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கும் நடிகர் விஜய், கடந்த சில தினங்களுக்கு முன்பு 234 தொகுதியிலும் 10,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவர்களை நேரில் சந்தித்து கெளவுரவப்படுத்தி அவர்களுக்கு நிதி உதவி வழங்கினார். அத்துடன் அந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய், நாளைய வாக்காளர்கள் மாணவர்கள் தான் என்றும், ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது என்றும் அரசியல் நீதியாக பேசினார். 

இதையும் படிக்க : மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் திறப்பு...துவங்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு!

நடிகர் விஜய்யின் பேச்சு, அரசியலில் நுழைவதற்கான அடித்தளம் தான் என்று அரசியல் வட்டாரத்தில் உள்ள தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து, விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை குஷீபடுத்துவதற்கு, ரசிகர்கள் விஜய்யின் அரசியல் பிரவேசம் உறுதி செய்து தற்போது விதவிதமான போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.

இதனிடேயே, வரும் ஜூன் 22ம் தேதி நடிகர் விஜய் தனது 49வது பிறந்த நாளை கொண்டாட உள்ள நிலையில், மதுரை தெற்கு மாவட்ட  விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ”2026 தமிழக முதல்வரே! எங்கள் தலைமுறையை தலைநிமிர்த்த தலைவரே", நீங்கள் வாழ்க பல்லாண்டு எனவும், தமிழ்நாட்டு தலைமை செயலக கட்டத்தின் முன் நடிகர் விஜய் நடந்து வருவது போலவும் "நாளை தமிழகத்தின்...! காத்திருக்கிறது அண்ணா", எனவும் குறிப்பிட்டு மதுரை மாநகரின் பல்வேறு பகுதியில் ஒட்டியுள்ள போஸ்டரால் அரசியல் கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.