5 நிமிடங்கள் நினைத்து, 4 மணி நேரம் கதைத்தோம்- ரஜினிகாந்தை சந்தித்த அமீர்:

ரஜினிகாந்தின் மிகப்பெரும் ரசிகனான அமீர் கான், அவரை நேரில் சந்தித்து பேசினார். தனது அனுபவங்கள் குறித்து பகிர்ந்த போது நெகிழ்ந்தார் அமீர்.

5 நிமிடங்கள் நினைத்து, 4 மணி நேரம் கதைத்தோம்- ரஜினிகாந்தை சந்தித்த அமீர்:

2022ம் ஆண்டின் வித்தியாசமான குடும்ப படம் தான் லால் சிங்க் சட்டா. அத்வைத் சந்திரன் இயக்கத்தில், அமீர் கான், கரீனா கப்பூர் கான் மற்றும் நாகசைத்தனியா ஆகியோர் நடித்துள்ள இந்த படம், வருகிற ஆகஸ்ட் 11ம் தேதி பன்மொழிப்படமாக வெளியாக இருக்கிறது.

சுமார் 100 லொகேஷன்களில் எடுக்கப்பட்ட இந்த படத்தின் படபிடிப்பு, 2019ம் ஆண்டு துவங்கினாலும், கொரோனா தட்டுப்பாடு காரணங்களால், கடந்த செப்டம்பர் 2021ம் ஆண்டு தான் முடிவடைந்தது. 

இந்த படத்திற்கான ப்ர்மோஷன் வேலைகள் தடபுடலாக நடந்து வர, சமீபத்தில், தமிழ்நாடு வந்தார். ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிடும் இந்த் அபடத்தின் தமிழ் பதிப்பிற்காக பலரும் எதிர்பார்த்துக் காத்திருக்க, கதாநாயகன் அமீருக்கு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்திப்பதற்கான எதிர்பார்ப்பு தான் அதிகமாக இருந்திருக்கிறது.

மேலும் படிக்க |  இந்தியை திமுக எதிர்த்தது இல்லை!- உதயநிதி ஸ்டாலின்:

இதனைத் தொடர்ந்து, இருவரும் சந்தித்து பல விஷயங்கள் குறித்து பேசியுள்ளனர். இது குறித்து அமீர் கான், “வெறும் 5 நிமிடங்கள் தான் ரஜினிகாந்துடன் பேச முடியும் என்று நினைத்தேன். ஆனால், அவருடன் சுமார் 4 மணி நேரமாக பேசிக் கொண்டிருந்தேன். அவரது திரை தரிசணத்தைப் பார்த்து புன்னகைத்த ஒரு ரசிகனான எனக்கு, அவருடன் அருகில் அமர்ந்து, பேசி, அவரது சினிமா பயணம் பற்றியும், அவரது பயணத்தின் முதல் பாதியைப் பற்றியும் அவருடன் உரையாட ஆர்வமாக இருந்தேன். அவரும் சலிக்காமல் நான் கேட்டதற்கெல்லாம் பொருமையாக பதிலளித்துக் கொண்டிருந்தார்.” என்று கூறினார்.

இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்ததோடு, படத்திற்கான வெற்றிக்காக ரசிகர்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.