குழந்தையை உலகத்திற்கு அறிமுகப்படுத்திய பிரியங்கா சோப்ரா...

உலகாளவில் பிரசித்தியான பிரியங்கா சோப்ரா தனது குழந்தையை உலகத்திற்கு அறிமுகப்படுத்தினார். அந்த போட்டோக்காள் தற்போது வைரலாகி வருகிறது.

குழந்தையை உலகத்திற்கு அறிமுகப்படுத்திய பிரியங்கா சோப்ரா...

உலகளவில் பிரபலமான பிரியங்கா சோப்ரா தனது துறையில் கொடி கட்டி பறந்து வருவதோடு, சமூக செவைகளாலும் உலகளவில் ரசிகர்களைக் கொண்டவர். நடிகை பாடகி என பன்முகை தன்மை கொண்டவரான பிரியங்கா சோப்ரா, இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து, ஹாலிவுட்டிற்கு கால் தடம் பதித்தார்.

எந்த வித உதவியும் இன்றி பின்னணியும் இல்லாமல் இன்று ஹாலிவுட்டிலும் தனக்கென ஒரு தனி இடம் பிடித்த பிரியங்கா சோப்ரா, தனது பல நாள் காதலரான நிக் ஜோனசை அமெரிக்க மற்றும் இந்திய முறை படி திருமணம் செய்து கொண்டார். உலகளவில் இது மக்கள் கவனத்தை ஈர்த்தது என்றே சொல்லலாம்.

மேலும் படிக்க | ‘கேப்டன்’ திருமண நாளுக்கு குவியும் வாழ்த்துகள்...

இந்நிலையில், சரோகசி, அதாவது வாடகை தாய் மூலம், தங்களது முதல் குழந்தையை பெற்றெடுத்தார். மாலதி மேரி என்ற பெயர் கொண்ட அவரை இது வரை அதிகமாக மக்கள் முன்பு அறிமுகப்படுத்தாமல் இருந்த நிலையில், தற்போது அவரை தனது மடியில் அமர்த்தி உலகத்திற்கு அறிமுகப்படுத்தியுள்ளார் பிரியங்கா.

வெள்ளை மற்றும் மங்கிய வெள்ளை நிற ஆடையில் தேவதை போல் ஐருந்த மாலதி மேரியை தனது கைகளில் தூக்கி விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்த பிரியங்காவின் போட்டோக்கள் இணையத்தில் தற்போது படு வைரலாகி வர, ரசிகர்கள் பலரும் அந்த குழந்தையைக் ஒஞ்சி பதிவிட்டு வருகின்றனர்.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | எதிர்ப்புகளைத் தாண்டி வெற்றி வாகை சூடிய பதான்...