‘கேப்டன்’ திருமண நாளுக்கு குவியும் வாழ்த்துகள்...

கேப்டன் விஜயகாந்த் திருமண நாளுக்கு அனைவரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

‘கேப்டன்’ திருமண நாளுக்கு குவியும் வாழ்த்துகள்...

பல லட்ச ரசிகர்கள் கொண்ட தென்னிந்திய ஹீரோக்களில், நிஜ வாழ்விலும் தனது சிறப்பால் அதே அளவு உண்மையான ரசிகர்களைக் கொண்டவர் தான், கருப்பு எம்.ஜி.ஆர் என பலராலும் அன்பாக அழைக்கப்படும் கேப்டன் விஜயகாந்த்.

அவரது தானங்கள் மற்றும் உதவிகள் மூலம் பல லட்ச மனங்களை சம்பாதித்த விஜயகாந்த், மக்களுக்காக தனது நலத்திட்டங்களை அதிகாரத்தில் நின்று செய்ய வேண்டும் என்பதற்காக, அரசியலில் குதித்தார்.

தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சி தலைவராக பல வகையான நன்மைகள் செய்து பெரும் புரட்சியையே ஏற்படுத்தினார் என்று தான் கூற வேண்டும். ஆனால், சமீபத்தில் அவருக்கு உடல்நலம் சரியில்லாமல் போனது.

மேலும் படிக்க | 'பொம்மை நாயகி' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பா.ரஞ்சித்...

அதிகமாக பொது வெளிகளில் வராத நிலையில், பல வகையான சிகிச்சைகளுக்குப் பிறகு தற்போது ஒரு சில நிகழ்ச்சிகளுக்கு விஜயகாந்த் வெளிவந்தார். இந்நிலையில், இன்று தனது திருமண நாளைக் கொண்டாடும் விஜயகாந்திற்கு அனைவரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அதில், இயக்குனர் மற்றும் நடிகர் விஜயின் தந்தையான எஸ்.ஏ. சந்திரசேகர் விஜயகாந்தை நேரில் சந்தித்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அந்த போட்டோ இணையத்தில் தர்போது வைரலாகி வருகிறது.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | எதிர்ப்புகளைத் தாண்டி வெற்றி வாகை சூடிய பதான்...