எதிர்ப்பார்த்திருந்த திரைப்படங்கள்: எப்போது வரும்..? புதிய அப்டேட் இதோ..!

எதிர்ப்பார்த்திருந்த   திரைப்படங்கள்:  எப்போது வரும்..?   புதிய  அப்டேட் இதோ..!

‘ஜப்பான்’ படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியீடு..!! 

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ஜப்பான் திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியீட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை  இயக்குநர் ராஜுமுருகன் இயக்கியுள்ளார். இதில், கார்த்தி, அனு இம்மானுவேல், சுனில், விஜய் மில்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படம் வருகின்ற தீபாவளியன்று வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் இன்று இரவு 10 மணிக்கு வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.

 'இந்தியன்-2' புதிய அப்டேட் நாளை காலை வெளியீடு..!!

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன்-2 திரைப்படத்தின் அடுத்த அப்டேட் நாளை வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.

இந்த திரைப்படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் அடுத்த அப்டேட் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என போஸ்டரை பகிர்ந்து படக்குழு அறிவித்துள்ளது. 

இதையும் படிக்க  |  தீபாவளி பண்டிகை சிறப்பு பேருந்துகள் தொடர்பான தகவல்...!