மனோபாலாவின் உடல் இன்று தகனம் செய்யப்படவுள்ளது...!

மனோபாலாவின் உடல் இன்று தகனம் செய்யப்படவுள்ளது...!

பிரபல நகைச்சுவை நடிகரும், இயக்குநருமான மனோபாலா  உடல் நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், சென்னை வளசரவாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் அவரது உடல் இன்று தகனம் செய்யப்பட உள்ளது.

மறைந்த மனோபாலாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள, அவரது வீட்டில் வைக்கப்பட்டு உள்ளது.  அவரது உடலுக்கு திரைப்பட நடிகர்களான பாக்கியராஜ், சரத்குமார், ராதிகா, கவுண்டமணி, பார்த்திபன், சசிகுமார், சூரி மற்றும் இயக்குநர் மணிரத்னம், கே எஸ் ரவிக்குமார், சங்கர், லோகேஷ் கனகராஜ், விருமாண்டி உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர். அப்போது பேசிய இயக்குநர் சங்கர் எப்போதும் கலகலப்பாக இருக்க கூடிய நபர் மனோபாலா என்றும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.

இதையடுத்து பாஜக முன்னாள் தேசிய தலைவர் ஹெச் ராஜா நேரில் அஞ்சலி செலுத்தினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், திரைப்பட நடிகரும் , தயாரிப்பாளருமான மனோபாலாவின் மறைவு தமிழ் திரை உலகிற்கு மிகப் பெரிய இழப்பு என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க : "பாஜக அரசு கொள்ளையடிக்கும் போது பிரதமர் என்ன செய்து கொண்டிருந்தார்" பிரியங்கா கேள்வி...!

பின்னர் பேசிய நடிகர் வையாபுரி, வேதனையை கூட நகைச்சுவையாக எடுத்துக்கொண்டு எல்லோரிடமும் எளிமையாக பழகக்கூடிய நபர் மனோபாலா என்று தெரிவித்தார். அதனை தொடர்ந்து நடிகர்கள் ராஜேஷ், நடராஜன், எம் எஸ் பாஸ்கர், சாம்ஸ், கோவை சரளா உள்ளிட்ட பலர் மனோபாலாவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் பிரபல நகைச்சுவை நடிகரும், இயக்குநருமான மனோபாலாவின்  உடல், சென்னை வளசரவாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் இன்று தகனம் செய்யப்பட உள்ளது.