ஏப்ரல் 30-ல் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்...!

ஏப்ரல் 30-ல் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்...!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் தேர்தல் ஏப்ரல் 30ம் தேதி நடைபெறும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் நிர்வாகிகளுக்கான தேர்தல் மார்ச் 26ஆம் தேதி நடைபெறும் என்கிற அறிவிப்பை ரத்து செய்யக் கோரியும், தேர்தல் நடத்த சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியை தேர்தல் அதிகாரியாக நீதிமன்றமே நியமிக்க உத்தரவிடக் கோரியும் அதன் உறுப்பினர்கள் கமல்குமார், சீனிவாசன், விடியல் ராஜ் உள்ளிட்ட எட்டு தயாரிப்பாளர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இதையும் படிக்க : கலாஷேத்ரா விவகாரம்: குற்றம்சாட்டப்பட்ட 4 பேராசிரியர்கள் பணி நீக்கம்... !

ஏற்கனவே தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.வெங்கட்ராமன் மற்றும் நீதிபதி வி.பாரதிதாசன் ஆகியோரை நியமித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி கே.குமரேஷ்பாபு முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஏப்ரல் 30-ம் தேதி காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை நடைபெற உள்ளதாகவும், வாக்கு எண்ணிக்கை மே 1-ம் தேதி நடைபெறும் என்றும் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.