ரசிகர்கள் முன்பு இரவு 12 மணிக்கு லதா கேக் வெட்டிக் கொண்டாட்டம்...

ரஜினிகாந்தின் 72வது பிறந்தநாளையொட்டி அவரது மனைவி இரவு 12 மணிக்கு கோயம்பேட்டில் உள்ள திரையரங்கில் ரசிகர்கள் மத்தியில் கேக் வெட்டிக் கொண்டாடினார்.

ரசிகர்கள் முன்பு இரவு 12 மணிக்கு லதா கேக் வெட்டிக் கொண்டாட்டம்...

ஸ்டைல், விறு விறுப்பு என ரசிகர்களால் கவரப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு இன்று 72 வது பிறந்தநாள். நடத்துனராக பணிக்கு வந்து திரையுலகத்தில் எட்டாத உயரத்தை தொட்டுள்ள அவரின் பிறந்தநாளை ரசிகர்கள் பல இடங்களில் கொண்டாடி வருகின்றனர்.

ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் அவர் நடித்த படங்களை கொண்டு இரவு 12 மணிக்கு சிறப்பு தொகுப்புகள் திரையிடப்பட்டன. அங்கு ரசிகர்கள் பலூன் கட்டியும் தோரணங்கள் கட்டியும் உற்சாகமாக கொண்டாடினர். அப்போது  திரையரங்குக்கு வந்த  ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், ரசிகர்கள் மத்தியில் கேக் கொண்டாடினார். 

இதைத்தொடரந்து பாபா 2 திரைப்படம் திரையரங்களில் திரையிடப்பட்டது. அப்போது அரங்கம் முழுவதும் அவரது ரசிகர்கள் செல்போனில் டாரச் அடித்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டின் முன்பு ஏராளமான ரசிகர்கள் திரண்டு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினர்.  

மேலும் படிக்க | வாழும் வள்ளுவரே...! இது என்னடா தலைவருக்கு வந்த சோதனை...