வாழும் வள்ளுவரே...! இது என்னடா தலைவருக்கு வந்த சோதனை...

வாழும் வள்ளுவரே...! இது என்னடா தலைவருக்கு வந்த சோதனை...

உலகம் முழுவதும் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் தான் என பல கோடி ரசிகர்கள் ஒரே நேரத்தில் கோஷமிடுவார்கள். அப்படிப்பட்ட ரஜினிகாந்த் கிட்டத்தட்ட 3 தலைமுறையினருக்கு சூப்பர் ஸ்டாராகவே வாழ்ந்து வரும் நிலையில், நாளை அவர் தனது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார்.

ஆண்டுதோரும் டிசம்பர் 12ம் தேதி என்றாலே உற்சாகத்தில் துள்ளி குதிக்கும் ரசிகர்கள் கூட்டத்தினரால் பல வகையான வாழ்த்து மடல்கள் குவியும் என்பது அனைவரும் அறிந்தது. அதிலும், தற்போது அரசியலில் குதித்துள்ள ரஜினிக்கு வரும் வாழ்த்துகள் எல்லாம், சர்ச்சையில் இருந்து தப்பிக்கத் துடிக்கும் ரஜினிகாந்தை மேலும் சர்ச்சையில் தள்ளி விடும் வகையிலேயே இருக்கின்றன.

மேலும் படிக்க | அம்பேத்கரின் கோட்டு சூட்டும்.. அதை பற்றிய காந்தியின் கணிப்பும்..!

ஒரு புறம் பாஜகவிற்கு ஆதரவு தரும் வகையில் ஒரு சில கருத்துகளை கூறுவது மட்டுமின்றி தனிப்பட்ட முறையிலும் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட நிலையில், அவருக்கு வரும் வாழ்த்து போஸ்டர்கள் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகின்றனர்.

மேலும், பாஜகவில் அவர் இணைய வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்விக்கு கூட, இல்லை என சூசகமாக அவர் கூறியது பெரும் செய்தி தலைப்பில் இடம் பிடித்திருந்தது. தனக்கு ஆன்மீக நாட்டம் இருப்பது தவிற வேறு எந்த விதத்திலும் பாஜகவுடனான சம்மந்தம் இல்லை என்றும், மக்களுக்கு தான் சேவகம் செய்யவே அரசியலுக்கு வந்ததாகவும் பல முறை அவர் தெளிவுப்படுத்திய பிறகும் ரசிகர்களால் உருவாக்கப்படும் அவர் மீதான சர்ச்சைகள் குறைந்த பாடில்லை.

மேலும் படிக்க | ஆயிரம் அதிசயம் அமைந்தது பாபா ஜாதகம்... ரீரிலீசுக்காக ரெடியாகும் ‘பாபா’ படம்...

இந்த நிலையில், மதுரையில், திருவள்ளுவர் போட்டோவில் ரஜினி முகத்தை மார்ஃப் செய்து காவி உடை மற்றும் ருத்ராட்ச மாலை அணிந்து போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். இதில் தலைப்பு வேறு, “வாழும் வள்ளுவரே!” என அடித்துள்ளனர்.

இந்த சர்ச்சைக்குறிய போஸ்டரால் பல விவாதங்கள் கிளம்பியுள்ளன. எதற்காக இது போன்றா பாவ செயல்களை செய்கிறீர்கள் என்றும், இது என்ன டா எங்க தலைவருக்கு வந்த சோதனை என்றெல்லாம் கமெண்ட் செய்து இணையத்தை ரசிகர்கள் தெரிக்கவிட்டு வருகின்றனர்.

பிறந்தநாள் அதுவுமாக தேவையில்லாத சர்ச்சையில் சிக்கித் தவிக்கும் ரஜினிக்காக பாவம் பார்ப்பதா, அல்லது இப்படியெல்லாம் சிக்கித் தவிப்பதைப் பார்த்து கை கொட்டி சிரிப்பதா எனத் தெரியவில்லை...

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | ரீ எண்ட்ரீ கொடுக்கவுள்ள பாபா...டப்பிங் கொடுத்த சூப்பர் ஸ்டார்...!