பிரான்சில் அஜித் படத்திற்கு அதிக வரவேற்பு...

பிரான்சில் அஜித் படத்திற்கு அதிக வரவேற்பு...

பிரான்சில் அஜித் படத்திற்கு அதிக வரவேற்பு இருப்பதாக அந்த நாட்டு தொலைக்காட்சியில் கலந்துரையாடிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

பிரான்ஸின் முக்கிய நகர்களில் பிரெஞ்ச் படங்களைவிட துணிவு படத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும், அஜித்குமாருக்கு பாரீஸில் ஏராளமான ரசிகர்கள் இருப்பதாக அந்த நிகழ்ச்சியில் பேசப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | வாடகை தாய் குறித்து பிரியங்கா சோப்ரா விளக்கம்...

இவ்வளவு நாட்கள் துணிவு படம் ஹவுஸ்புல் காட்சிகளில் ஓடுவது மிகப்பெரிய விஷயம் எனவும் பிரான்ஸ் தனியார் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

போனிகப்பூர் தயாரிப்பில் எச். விநோத் இயக்கத்தில் அஜித் மஞ்சு வாரியர் உட்பட பலர் நடித்துள்ள துணிவு படத்தினை ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

இந்தியாவில் பெற்ற வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், உலகளவிலும் இந்த படம் பெரிய வரவேற்பு பெற்று வருகிறது ரசிகர்களுக்கு பெரும் குஷியைக் கொடுத்துள்ளது.

மேலும் படிக்க | பொன்னியின் செல்வன் வரலாறு திரிக்கப்பட்ட படம்- படத்திற்கு எதிரான வழக்கு...