வாரிசு-க்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்? குறித்த தேதியில் வெளியாகுமா?

வாரிசு-க்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்? குறித்த தேதியில் வெளியாகுமா?

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “வாரிசு” திரைப்படம் வெளிநாடுகளில் வெளியாவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாரிசு:

வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்தை தில் ராஜூ தயாரித்துள்ளார். தமன் இசை அமைத்துள்ள இப்படத்தில், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகி பாபு உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படம் வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. 

வாரிசுக்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்:

இந்தியாவில் படத்தின் வெளியீட்டிற்கான ஏற்பாடுகள் துரித கதியில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வெளிநாடுகளில் குறித்த தேதியில் வாரிசு திரைப்படம் வெளியாகுமா? என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் வாரிசு திரைப்படம் முதலில் ஜனவரி 12ம் தேதி தான் வெளியாவதாக இருந்தது. இதனால் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் 11ம் தேதி சிறப்பு காட்சிகளுக்கான புக்கிங் தொடங்கப்பட்டது. அங்குள்ள ரசிகர்களும் அதே தேதிக்கு டிக்கெட் புக் செய்திருந்தனர். ஆனால் இரவோடு இரவாக படத்தின் தயாரிப்பு தரப்பினர் ரிலீஸ் தேதியை 11ம் தேதிக்கு மாற்றியதால், சிறப்பு காட்சிகளை 10ம் தேதியே போட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதையும் படிக்க: எம்.ஜி.ஆர் அழகை காட்டி ஆட்சியை பிடிக்கவில்லை...மாறாக இதைப்பேசி தான் ஆட்சியை பிடித்தார்...திருமாவளவன் பேச்சு!

குறித்த நாளில் வாரிசு வெளியாகுமா?

இதனால் 11 ஆம் தேதிக்கு புக் செய்தவர்களின் டிக்கெட்டை 10ம் தேதிக்கு மாற்றப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதுமட்டுமின்றி வாரிசு படத்தின் தெலுங்கு பதிப்புக்கான சென்சார் நாளைக்குத்தான் நடைபெற உள்ளது. அதேசமயம், வெளிநாட்டு காப்பிக்கான பணிகளும் இன்னும் முடியவில்லை என்று கூறப்படுகிறது. எனவே வாரிசு திரைப்படம் திட்டமிட்டபடி வெளிநாடுகளில் குறித்த நாளில் வெளியாகுமா இல்லை சில தினங்கள் தள்ளிப்போகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.