எம்.ஜி.ஆர் அழகை காட்டி ஆட்சியை பிடிக்கவில்லை...மாறாக இதைப்பேசி தான் ஆட்சியை பிடித்தார்...திருமாவளவன் பேச்சு!

எம்.ஜி.ஆர் அழகை காட்டி ஆட்சியை பிடிக்கவில்லை...மாறாக இதைப்பேசி தான் ஆட்சியை பிடித்தார்...திருமாவளவன் பேச்சு!
Published on
Updated on
1 min read

எம்.ஜி.ஆர். அரசியல் பேசி தான் ஆட்சியை பிடித்தார் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

இரும்பன் இசை வெளியீட்டு விழா:

ஜூனியர் எம்.ஜி.ஆர் நடிப்பில், இயக்குனர் கீரா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “இரும்பன்”. இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யா மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கடின உழைப்பு வேண்டும்:

பின்னர் மேடையில் பேசிய சீமான், ஜூனியர் எம்.ஜி.ஆர் நீங்கள் சினிமாவில் வருவதற்கு எம்.ஜி.ஆர் பெயர் உதவி இருக்கலாம். ஆனால், இங்கு வெற்றி பெற கடுமையான உழைப்பு வேண்டும். எம்.

விஜய் ஒரு சூப்பர் ஸ்டார்:

அதேபோன்று, விஜய் திரையுலகில் அப்பாவின் மூலம் வந்தாலும், தனது கடின உழைப்பால் இப்போது சூப்பர் ஸ்டாராக இருக்கிறார் என்று விஜய் குறித்து புகழ்ந்து கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், முதலில் இரும்பன் படத்திற்கு “குறவன்” என்ற பெயரையே வைத்திருந்தனர். அதனை நான் தான் மாற்ற சொன்னேன் என்று தெரிவித்த அவர், தமிழ் இனத்தின் ஆதிக்குடி குறவன் குடிதான். முதலில் மனிதன் பேசிய மொழி தமிழ் என்று கூறினார்.

திரைப்படம் மூலம் அரசியல் மாற்றங்கள்:

அதன்பின்னர் மேடையில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், ”இரும்பன்” திரைப்படம் தமிழ் மக்களிடம் சென்றடைய வேண்டும் என்பதே எனது விருப்பம் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர்,  திரைப்படத்துறை ஒரு மிகப் பெரிய வணிக தளம். அதன்மூலம் அரசியல் மாற்றங்கள் ஏற்படுத்தக்கூடிய மாநிலமாக தமிழகம் உள்ளது என்று தெரிவித்தார்.

எம்ஜிஆர் ஆட்சியை பிடித்தது எப்படி:

முன்னாள் முதலமைச்சர்கள் முதல் எதிர்க்கட்சித் தலைவர் வரை திரைப்படத்துறையில் இருந்தவர்கள் தான்.  வேண்டுமென்றால், மக்களின் தேவைகளை பூர்த்தி செய்பவர்கள் திரைப்படத்துறையில் இருந்தவர்கள் என கருதலாம். அதுமட்டுமல்லாமல், திரைப்படங்கள் மூலமாக அரசியல் கருத்துகளை சொல்லும் துணிச்சல் இருந்ததாக கூறிய அவர், எம்ஜிஆர் அழகை காட்டி ஆட்சியை பிடிக்கவில்லை, அரசியல் பேசி தான் ஆட்சியை பிடித்தார் என்று திருமாவளவன் கூறினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com