"பெரியார் பல்கலைக்கழக தேர்வுகள் தாமதம்" இராமதாசு கண்டனம்...!!

"பெரியார் பல்கலைக்கழக தேர்வுகள் தாமதம்"  இராமதாசு கண்டனம்...!!

தேர்வுகள் தாமதத்தால் பெரியார் பல்கலைக் கழகத்திற்குட்பட்ட  கல்லூரிகளில் பயிலும் சுமார் 75,000 மாணவர்கள் பட்ட மேற்படிப்பில் சேருவதற்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதை பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைந்த 115 கல்லூரிகளில் வரும் 17-ஆம் தேதி தொடங்குவதாக இருந்த பருவத் தேர்வுகள் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஜூன் 16-ஆம் தேதி நிறைவடையவுள்ள இத்தேர்வுகளின் முடிவுகள் ஜூலை மாத இறுதியில் தான் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட பெரும்பான்மையான பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்புக்கான பருவத் தேர்வுகள் கடந்த மாதமே நிறைவடைந்து விட்டன. அவற்றின் முடிவுகள் இந்த மாத இறுதியில் வெளியிடப்பட்டு, அடுத்த மாதத் தொடக்கத்தில் பட்ட மேற்படிப்புக்கான மாணவர்  சேர்க்கை தொடங்கவுள்ளது. இத்தகைய சூழலில் பெரியார் பல்கலைக்கழகத் தேர்வுகள் மே 17-ஆம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்ததே மிகவும்  தாமதம் ஆகும். அத்தேர்வுகள் மேலும் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டிருப்பது மாணவர்களுக்கு சரி செய்ய முடியாத பாதிப்புகளை ஏற்படுத்தி விடும் என கூறப்படுகிறது. 

இதனை கண்டித்து பாமக முன்னாள் தலைவர் ராமதாஸ் டிவிட்டரில் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்வுகள் தாமதத்தால் பெரியார் பல்கலைக் கழகத்திற்குட்பட்ட  கல்லூரிகளில் பயிலும் சுமார் 75,000 மாணவர்கள் பட்ட மேற்படிப்பில் சேருவதற்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்படும் என தெரிவித்துள்ளார்.Periyar University PhD Admission 2023-24 Open; Apply till January 27

மேலும், பெரியார் பல்கலைக்கழகத் தேர்வுகள் தாமதம் ஆவதற்கு பல்கலைக்கழக நிர்வாகத்தின் அலட்சியம் தான் காரணம் என குற்றம் சாட்டிய அவர் தேர்வுக்கான விடைத்தாள்கள் அச்சடிக்கும் பணிகள் இன்னும் நிறைவடையாதது தான் தேர்வுகள் தொடங்கப்படாததற்கு காரணம் எனக் கூறியுள்ளார். மேலும் தமிழகத்தின் பிற பல்கலைக்கழகங்கள் அரசு அச்சகங்களில் விடைத்தாள்களை அச்சிடும்போது பெரியார் பல்கலைக்கழகம் மட்டும் தனியார் அச்சகத்தில் விடைத்தாள்களை அச்சிடுவதும், அதற்கான ஆணைகள் மிகவும் தாமதமாக வழங்கப்பட்டதும் தான் தேர்வுகள் தாமதமாவதற்கு காரணம் என குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்ந்து, பெரியார் பல்கலைக்கழக நிர்வாகத்தின் தவறு மற்றும் அலட்சியத்தால் மாணவர்கள் பாதிக்கப்படுவதை அனுமதிக்கக் கூடாது எனவும்  விடைத்தாள்கள் அச்சடிப்பதற்காக ஆணைகள் தாமதமாக வழங்கப்பட்டது குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிக்க:"அமைச்சர் துரைமுருகன் தனது மகளை ரகசியமாக காதலனுடன் பேச அனுமதிப்பாரா?" முன்னாள் அமைச்சர் வி. சோமசுந்தரம் கேள்வி!