ஒரே நாடு ஒரே நுழைவுத்தேர்வு....!!!!

வரும் ஆண்டுகளில் இந்திய முழுமைக்கும் ஒரே நுழைவுதேர்வை கொண்டு வர இருப்பதாக தேசிய தேர்வு குழுமம் அறிவித்துள்ளது.
ஒரே நாடு ஒரே நுழைவுத்தேர்வு....!!!!
Published on
Updated on
1 min read

தேசிய பொறியியல் மற்றும் மருத்துவ நுழைவுத் தேர்வுகளை பொதுப்பல்கலைக்கழக நுழைவு தேர்வில் இணைப்பது குறித்து ஆராய்ந்து வருவதாக பல்கலைக்கழக மானியக்குழு தலைவர்   ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.  இதைக் குறித்த செயல்பாடு வரும் ஆண்டுக்குள் முழுமைப்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

நாட்டில் இதுவரை NEET, JEE, CUET போன்ற நுழைவு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.  இந்த தேர்வுகள் தேசிய தேர்வு முகாமையால் நடத்தப்படுகிறது.  அனைத்து நுழைவு தேர்வுகளையும் இணைத்து ஒரே தேர்வாக நடத்தும் திட்டத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் 45 தனியார் பல்கலைக்கழகங்கள் உள்பட 90 பல்கலைக்கழகங்கள் உள்ளன.  அவற்றில் இளங்கலை மாணவர்கள் சேர்க்கைக்காக cuet நுழைவுத்தேர்வு இந்த ஆண்டு தொடங்கப்பட்டது. 1.05 மில்லியன் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக NTA  தெரிவித்திருந்தது.  NEET தேர்விற்கு 1.8 மில்லியன் மாணவர்கள் தேர்வு எழுதினர்.

தேசிய கல்வி கொள்கை 2020ன் படி ஒரே நாடு ஒரே நுழைவுத்தேர்வு என்ற கருத்து அடிப்படையில் நாடு முழுமைக்கும் ஒரே நுழைவு தேர்வு கொண்டுவரும் திடடத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார் ஜெகதீஷ் குமார்.  NEET மற்றும் JEE தேர்வுகளுக்கும் CUET தேர்வுக்கும் ஒரே பாடமுறை என்பதால் CUET நுழைவுத்தேர்வையே வைத்துக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.  ஆனால் உடனேயே முடிவு எடுக்கப்படாது எனவும் குழு அமைத்து ஆய்வு செய்து அதன்பின்னர் முடிவு எடுக்கப்படும் எனவும் ஜெகதீஷ் கூறியுள்ளார்.

வரும் ஆண்டுக்குள் இந்தியாவில் மாணவர்களின் சுமையை குறைக்கும் வகையில் ஒரே நுழைவு தேர்வு மேம்படுத்தப்படட முறையில் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com