
தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்ட மாணவர்களுக்கான பொதுப் பல்கலைக்கழக நுழைவு தேர்வு (CUET) ஆகஸ்ட் 24 முதல் 28 வரை நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தேர்வர்களுக்கு புதிய சேர்க்கை அட்டைகள் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளனர்.
ஆகஸ்ட்4 முதல் 6 வரை திட்டமிடப்பட்டிருந்த cuet தேர்வு தொழில்நுட்ப கோளாறு காரணமாக சில தேர்வு மையங்களில் ஒத்தி வைக்கப்பட்டது. இதற்கு முன்னதாக தேர்வுகள் ஆகஸ்ட் 12 முதல் 14 வரை நடத்தப்படும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது ஆகஸ்ட் 24 முதல் 28 வரை நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 12 முதல் 14 வரை பல அரசு விழாக்கள் இருப்பதை காரணம் காட்டி மாணவர்கள் கோரிக்கை வைத்ததால் தேர்வு தள்ளி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆகஸ்ட் 4ம் தேதி முதல் ஷிப்ட் தேர்வு 17 மாநிலங்களின் பல தேர்வு மையங்களில் ரத்து செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது ஷிப்ட் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன.
தேர்வு ரத்து செய்யப்பட்டதைக் குறித்து தேர்வர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது எனவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.