தலையணை அருவியில் குளிக்கத் தடை விதிப்பு...

தொடர் மழையால், தலையணை அருவில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

தலையணை அருவியில் குளிக்கத் தடை விதிப்பு...

நெல்லை | களக்காடு மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தலையணை அமைந்துள்ளது. இயற்கையாகவே ஓடும் இந்த நீரோடையில் குழுமை அதிகம் என்பதாலும் மூலிகைகளை தழுவியபடி வருவதாலும் இங்கு குளிப்பதற்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவது வழக்கம்.

இந்த நிலையில் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது.  மழை தீவிரம் அடைந்ததால் தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.

இதனை தொடர்ந்து புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் உத்தரவின் பேரில்  தலையணையில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் தண்ணீர் குறைந்த பின்னரே சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க | காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பெய்த மழையால்... நெற்பயிா் அறுவடை பாதிப்பு...கவலையில் விவசாயிகள்!